Thursday, October 14, 2010

சேனைக்குடியிருப்பு ஆற்றில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்த்தர் கிட்டங்கி ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை துறைநீலாவணையை சேர்ந்தவரும் சேனைக்குடியிருப்பில் வசிப்பவருமான கோவிந்தபிள்ளை குணசேகரம் (50 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணையை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Continue reading →


 

Footer Widget #1

Footer Widget #2

Footer Widget #3

Footer Widget #4

Copyright 2010 News.thirukkovil.com. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog